அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் "(ரப்பி அரினீ கைஃப துஹ்யில் மவ்தா) என் இறைவனே! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!" என்று கேட்டபோது, (அவர்களை விட) சந்தேகப்படுவதற்கு நாங்களே அதிக உரிமை உடையவர்கள். அல்லாஹ் கேட்டான்: "(அவலம் துஃமின்?) நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?" அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், "(பலா வலாகின் லியத்மஇன்ன கல்பீ) ஆம் (நம்பிக்கை கொண்டேன்), எனினும் என் இதயம் அமைதி பெறுவதற்காகவே (கேட்டேன்)" என்று கூறினார்கள்.
லூத் (அலை) அவர்கள் மீது அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் உறுதியாக ஒரு பலமான ஆதரவை நாடினார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் தங்கியிருந்த காலத்தைப் போன்று நான் (சிறையில்) தங்கியிருந்து, அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால், அவருக்கு நான் பதிலளித்திருப்பேன்.