நான் அபூதர் (ரலி) அவர்களிடம், "நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்திருந்தால், அவர்களிடம் கேட்டிருப்பேன்" என்று கூறினேன்.
அவர்கள், "நீங்கள் அவர்களிடம் எதைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள்?" என்று கேட்டார்கள்.
நான், "முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்களா? என்று கேட்டிருப்பேன்" என்று கூறினேன்.
அவர்கள் கூறினார்கள்: "நான் அதைப்பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், '(நான் கண்டது) ஓர் ஒளி (மட்டுமே); நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?' என்று கூறினார்கள்."