وعن المغيرة بن شعبة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: سأل موسى صلى الله عليه وسلم ربه، ما أدنى أهل الجنة منزلة ؟ قال: هو رجل يجيء بعد ما أدخل أهل الجنة-الجنة، فيقال له : ادخل الجنة، فيقول: أي رب كيف وقد نزل الناس منازلهم، وأخذوا أخذاتهم؟ فيقول له: أترضى أن يكون لك مثل ملك ملك من ملوك الدنيا؟ فيقول: رضيت رب فيقول: لك ذلك ومثله ومثله ومثله ومثله، فيقول في الخامسة: رضيت يا رب فيقول: هذا لك وعشرة أمثاله، ولك ما اشتهيت نفسك، ولذت عينك، فيقول: رضيت رب، قال رب فأعلاهم منزلة؟ قال: أولئك الذين أردت؛ غرست كرامتهم بيدي، وختمت عليها، فلم تر عين، ولم تسمع أذن، ولم يخطر على قلب بشر ((رواه مسلم)).
அல்-முஃகீரா பின் ஷுஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மூஸா (அலை) அவர்கள் தம் இரட்சகனிடம் கேட்டார்கள்: 'ஜன்னாவாசிகளில் மிகக் குறைந்த தகுதியில் உள்ளவர் யார்?' அதற்கு அவன் (அல்லாஹ்) கூறினான்: 'ஜன்னாவாசிகள் அனைவரும் ஜன்னாவில் நுழைந்துவிட்ட பிறகு, எல்லோரையும் விடக் கடைசியாக ஜன்னாவில் அனுமதிக்கப்படும் ஒரு மனிதர்தான் அவர். அவரிடம், 'ஜன்னாவில் நுழைவாயாக' என்று கூறப்படும். ஆனால் அவர், 'என் இரட்சகனே! மக்கள் தத்தமது இருப்பிடங்களில் குடியேறி, தங்களுக்குரிய பங்குகளை எடுத்துக்கொண்டுவிட்ட நிலையில் நான் எப்படி நுழைவேன்?' என்று கேட்பார். அவரிடம், 'இவ்வுலக மன்னர்களில் ஒருவரின் ஆட்சியைப் போன்றதொரு ஆட்சி உனக்குக் கிடைத்தால் நீ திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவாயா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர், 'என் இரட்சகனே, நான் திருப்தியடைந்தேன்' என்பார். அல்லாஹ் கூறினான்: 'உனக்கு அது உண்டு, அதைப் போன்றதும், அதைப் போன்றதும், அதைப் போன்றதும், அதைப் போன்றதும் உண்டு.' ஐந்தாவது தடவையில் அவர், 'என் இரட்சகனே, நான் மிக்க திருப்தியடைந்துவிட்டேன்' என்பார். அல்லாஹ் கூறினான்: 'அது உனக்கு உண்டு, அதைப் போன்று பத்து மடங்கு அதிகமாகவும் உண்டு. மேலும், உன் மனம் விரும்பியவை அனைத்தும், உன் கண்கள் கண்டு மகிழ்ந்தவை அனைத்தும் உனக்கு உண்டு.' அதற்கு அவர், 'என் இரட்சகனே, நான் மிக்க திருப்தியடைந்துவிட்டேன்' என்பார்.' மூஸா (அலை) அவர்கள் கேட்டார்கள்: 'ஜன்னாவில் மிக உயர்ந்த தகுதியில் உள்ளவர்கள் யார்?' அல்லாஹ் கூறினான்: 'அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களை நானே தேர்ந்தெடுத்தேன்; அவர்களின் கண்ணியத்தை என் சொந்தக் கரத்தால் நிலைநாட்டினேன். எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனித உள்ளத்திலும் தோன்றியிராத அருட்பாக்கியங்கள் அவர்களுக்கு உண்டு என என் முத்திரையால் நான் உறுதிப்படுத்துகிறேன்.'"