மேற்கண்ட அறிவிப்பாளர் தொடர் வழியாகவே ஹிஷாம் அவர்களிடமிருந்து இவர்கள் அனைவரும் அறிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மற்றவரைவிட (சில சொற்களை) அதிகப்படுத்துகின்றனர்.
ஜரீர் மற்றும் வகீஃ ஆகியோரின் அறிவிப்புத் தொடரைப் போன்றே அஃமஷ் வழியாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அபூமுஆவியாவிடமிருந்து வரும் அபூபக்ர் அவர்களின் அறிவிப்பில் முஆத் (ரலி) அவர்களின் பெயர் உபை (ரலி) அவர்களின் பெயருக்கு முன்பாகவும், அபூகுறைப் அவர்களின் அறிவிப்பில் உபை (ரலி) அவர்களின் பெயர் முஆத் (ரலி) அவர்களின் பெயருக்கு முன்பாகவும் இடம்பெற்றுள்ளது.