அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை ஒன்றுதிரட்டுவான். அப்போது (பரிந்துரை கோருவது குறித்து) அவர்களுக்கு உள்ளுணர்வு ஊட்டப்படும்."
(பிறகு அறிவிப்பாளர் முந்தைய) ஹதீஸில் உள்ளதைப் போன்றே இதனையும் அறிவித்தார். அதில் நான்காவது முறையாக (நபி (ஸல்) அவர்கள்) குறிப்பிட்டதாவது:
"நான் (இறைவனிடம்), 'என் இறைவா! குர்ஆன் யாரைத் தடுத்துவிட்டதோ - அதாவது எவர் மீது (நரகத்தில்) நிரந்தரமாகத் தங்குவது கட்டாயமாகிவிட்டதோ - அவரைத் தவிர நரகத்தில் வேறு யாரும் மிஞ்சவில்லை' என்று கூறுவேன்."