وعن عبد الله بن عمرو بن العاص، رضي الله عنهما، أن النبي، صلى الله عليه وسلم، تلا قول الله عز وجل في إبراهيم، صلى الله عليه وسلم: {رب إنهن أضللن كثيراً من الناس فمن تبعني فإنه مني} ((إبراهيم:36))، وقول عيسى، صلى الله عليه وسلم:{إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم} ((المائدة: 118))، فرفع يديه وقال: "اللهم أمتى أمتى” وبكى، فقال الله عز وجل:" " يا جبريل اذهب إلى محمد وربك أعلم، فسله ما يبكيه؟ “ فأتاه جبريل، فأخبره رسول الله صلى الله عليه وسلم، بما قال: وهو أعلم، فقال الله تعالى: "يا جبريل اذهب إلى محمد فقل: إنا سنرضيك في أمتك ولا نسؤوك"
((رواه مسلم)).
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறிய, "என் இறைவா! அவை மக்களில் பலரை வழி கெடுத்துவிட்டன. எனவே, யார் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர்". (14:36) என்ற மற்றும் ஈஸா (அலை) அவர்கள் கூறிய, "நீ அவர்களைத் தண்டித்தால் அவர்கள் உன்னுடைய அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தால், நிச்சயமாக நீயே யாவரையும் மிகைத்தவன், ஞானமிக்கவன்". (5:118) என்ற மேன்மையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் வார்த்தைகளை ஓதினார்கள். பிறகு, அவர்கள் தம் கைகளை உயர்த்தி, "யா அல்லாஹ்! என் உம்மத், என் உம்மத்" என்று கூறி அழுதார்கள்; மேன்மைமிக்க அல்லாஹ் கூறினான்: "ஓ ஜிப்ரீல்! முஹம்மத் (ஸல்) அவர்களிடம் சென்று, 'உங்களை அழவைப்பது எது?' என்று கேளும்." அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (அவர்கள் அழுவதற்கான காரணத்தைக்) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் கூறியதை ஜிப்ரீலிடம் தெரிவித்தார்கள் (அல்லாஹ் அதை நன்கு அறிந்திருந்தான்). அப்போது அல்லாஹ் கூறினான்: "ஜிப்ரீல், முஹம்மத் (ஸல்) அவர்களிடம் சென்று கூறுங்கள்: 'நிச்சயமாக, உமது உம்மத் விஷயத்தில் நாம் உம்மை திருப்திப்படுத்துவோம், உம்மை ஒருபோதும் அதிருப்திக்குள்ளாக்க மாட்டோம்'."