அனஸ் (ரழி) அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டார்: "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை எங்கே இருக்கிறார்?" அதற்கு அவர்கள், "உமது தந்தை நரகத்தில் இருக்கிறார்" என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றதும், (நபி (ஸல்) அவர்கள்), "நிச்சயமாக என் தந்தையும் உமது தந்தையும் நரகத்தில் இருக்கிறார்கள்" என்று கூறினார்கள்.