وعن أبي عبد الله عمرو بن العاص رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم جهارًا غير سر يقول: إن آل بني فلان ليسوا بأوليائي، إنما وليي الله وصالح المؤمنين، ولكن لهم رحم أبلها ببلالها ((متفق عليه. واللفظ البخاري)).
அபூ அப்துல்லாஹ் அம்ர் பின் அல்-ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியமாக அன்றி, வெளிப்படையாகவே, 'இன்னாரின் (அதாவது அபூ தாலிப்) குடும்பத்தினர் என் ஆதரவாளர்கள் அல்லர். எனது ஆதரவாளன் அல்லாஹ்வும், சாலிஹான முஃமின்களுமே ஆவர். ஆனால் அவர்களுக்கும் எனக்கும் இரத்த உறவு (ரஹிம்) உண்டு; அதன் பிணைப்பை நான் பேணிப் பாதுகாப்பேன்' என்று கூறுவதை நான் கேட்டேன்.