இம்ரான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என்னுடைய சமுதாயத்திலிருந்து எழுபதாயிரம் பேர் எவ்விதக் கேள்விக்கணக்குமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்.”
அவர்கள் (நபித்தோழர்கள்), “(அல்லாஹ்வின் தூதரே!) அவர்கள் யார்?” என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் (உடல் நலத்திற்காகச்) சூடு போட்டுக் கொள்ளாதவர்கள்; (பிறரிடம்) ஓதிப்பார்க்காதவர்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே (முழுமையாகச்) சார்ந்திருப்பவர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது உக்காஷா (ரழி) எழுந்து, “என்னை அவர்களில் ஒருவராக ஆக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் அவர்களில் ஒருவர்” என்றார்கள்.
பிறகு மற்றொரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னை அவர்களில் ஒருவராக ஆக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்” என்று கூறினார்கள்.