(மக்கள்) இரவுத் தொழுகைக்காக நின்றார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே, நான் உங்களிடம் ஒரு காரியமாகப் பேச வேண்டும்" என்று கூறினார். மக்கள் அல்லது மக்களில் சிலர் தூக்கக் கலக்கத்திற்கு ஆளாகும் வரை, அவர்கள் (நபிகள் நாயகம் (ஸல்)) அவருடன் இரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அதன்பின்னர் அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அவர் (தாபித் அல்-புனானீ) உளூ பற்றிக் குறிப்பிடவில்லை.