மாலிக் பின் அல்-ஹுவைரித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தொழும்போது, ருகூஃ செய்யும்போது, ருகூஃவிலிருந்து தலையை உயர்த்தும்போது, ஸஜ்தாச் செய்யும்போது, ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது, தம் காதுகளின் மேல் பகுதிக்கு நேராக வரும் வரை தம் கைகளை உயர்த்துவதை அவர்கள் பார்த்தார்கள்.