ஸஹ்ல் இப்னு ஸஃது (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுகையின்போது, ஆடைகள் சிறியதாக இருந்த காரணத்தால் மக்கள் சிறுவர்களைப் போலத் தங்கள் ஆடைகளைக் கழுத்துகளில் கட்டிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். ஒருவர், "பெண்களே, ஆண்கள் (தங்கள் தலைகளை) உயர்த்தும் வரை உங்கள் தலைகளை உயர்த்தாதீர்கள்" என்று கூறினார்.