இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

711ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ مُعَاذٌ يُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

முஆத் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். பிறகு சென்று தமது மக்களுக்கு (குலத்தாருக்கு) தொழுகை நடத்துவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
705 fஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஏழு (ரக்அத்களையும்) மற்றும் எட்டு (ரக்அத்களையும்) தொழுதார்கள், அதாவது, (இணைக்கப்பட்ட) ளுஹர் மற்றும் அஸர் தொழுகைகள் (எட்டு ரக்அத்கள்) மற்றும் (இணைக்கப்பட்ட) மஃரிப் மற்றும் இஷா தொழுகைகள் (ஏழு ரக்அத்கள்).

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
875 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، - وَ هُوَ ابْنُ زَيْدٍ - عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَصَلَّيْتَ يَا فُلاَنُ "‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ قُمْ فَارْكَعْ ‏"‏ ‏.‏
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, அங்கு ஒருவர் வந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்னாரே, நீர் (இரண்டு ரக்அத்கள்) தொழுதுவிட்டீரா?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர், ‘இல்லை’ என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் எழுந்து தொழுங்கள்” என்றார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
599சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، كَانَ يُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْعِشَاءَ ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ تِلْكَ الصَّلاَةَ ‏.‏
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவுத் தொழுகையைத் தொழுவார்கள். பிறகு சென்று தம் மக்களுக்கு அதே தொழுகையைத் தொழுவிப்பார்கள்.

ஹதீஸ் தரம் : ஹஸன் ஸஹீஹ் (அல்பானி)
حسن صحيح (الألباني)