அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள்:
"அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ மினத்-துனூபி வல்-கதாயா. அல்லாஹும்ம நக்கினீ மின்ஹா கமா யுனக்கா அஸ்-ஸவ்புல் அப்யளு மினத்-தனஸ், அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ பிஸ்-ஸல்ஜி வல்-பரதி வல்-மாஇல் பாரித் (யா அல்லாஹ், பாவங்கள் மற்றும் தவறுகளிலிருந்து என்னைப் பரிசுத்தப்படுத்துவாயாக. யா அல்லாஹ், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போல் அதிலிருந்து என்னை நீ தூய்மைப்படுத்துவாயாக, யா அல்லாஹ், பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் குளிர்ச்சியான நீரைக் கொண்டு என்னைப் பரிசுத்தப்படுத்துவாயாக)."