அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "(உமது பெரிய தந்தை) அபூ தாலிப் இறந்துவிட்டார்" என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "சென்று அவரை (மண்ணில்) மறைப்பீராக (அடக்கம் செய்வீராக)" என்று கூறினார்கள். அலீ (ரழி) அவர்கள், "நிச்சயமாக அவர் ஒரு முஷ்ரிக்காக (இணைவைப்பவராக) இறந்துள்ளாரே?" என்று (மறுத்துக்) கூறினார்கள். நபியவர்கள், "சென்று அவரை (மண்ணில்) மறைப்பீராக" என்று (மீண்டும்) கூறினார்கள். அலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: "நான் அவரை (மண்ணில்) மறைத்துவிட்டு (அடக்கம் செய்துவிட்டு) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், 'நீர் குளித்துக்கொள்வீராக' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ளயீஃப் (இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது)