அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர், மற்றொருவரின் அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவரது அனுமதியின்றி) இமாமாக நின்று தொழுகை நடத்தக் கூடாது. மேலும், ஒருவரது வீட்டில் அவருக்குரிய சிறப்பு இருக்கையில் அவரது அனுமதியின்றி (வேறெவரும்) அமரக் கூடாது."