அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் (தொழுகையை முடித்துவிட்டு, தம் தோழர்களை நோக்கித்) திரும்பி அவர்கள் கூறினார்கள்: "ஓ இன்னாரே, நீர் ஏன் உமது தொழுகையை செவ்வனே நிறைவேற்றுவதில்லை? தொழுகின்றவர் தாம் எவ்வாறு தொழுகின்றார் என்பதைக் கவனிப்பதில்லையா? அவர் தமக்காகவே தொழுகின்றார் அல்லவா? அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் எனக்கு முன்னால் பார்ப்பது போலவே எனக்குப் பின்னாலும் பார்க்கின்றேன்."
ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் (தொழுகையை முடித்து மக்களை நோக்கித்) திரும்பி, "இன்னாரே! உமது தொழுகையை நீர் அழகிய முறையில் (முறையாகப் பேணித்) தொழக்கூடாதா? தொழுபவர் தாம் எவ்வாறு தொழுகிறோம் என்பதை (தொழுகையின் போது) கவனிக்கக் கூடாதா? ஏனெனில், அவர் தமக்காகவே (தனது நன்மைக்காகவே) தொழுகிறார். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு முன்னால் இருப்பவர்களை நான் பார்ப்பதைப் போன்றே, எனக்குப் பின்னால் இருப்பவர்களையும் நிச்சயமாக நான் பார்க்கிறேன்" என்று கூறினார்கள்.
(இதனை இமாம் முஸ்லிம் தமது 'ஸஹீஹ்' நூலில் பதிவு செய்துள்ளார்).