حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، أَنْبَأَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ رَبِيعَةَ بْنَ كَعْبٍ الأَسْلَمِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، كَانَ يَبِيتُ عِنْدَ بَابِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَكَانَ يَسْمَعُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ مِنَ اللَّيْلِ " سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ " . الْهَوِيَّ ثُمَّ يَقُولُ " سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ " .
ரபீஆ பின் கஃப் அல்-அஸ்லமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வீட்டு வாசலில் (அவர்களுக்கு சேவை செய்வதற்காக) இரவு தங்குபவனாக இருந்தேன். அப்போது இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'சுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன் (உலகங்களின் இறைவனான அல்லாஹ் தூயவன்)' என்று நீண்ட நேரம் கூறுவதை நான் கேட்பவனாக இருந்தேன். பிறகு, 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ் தூயவன், அவனுக்கே புகழ் அனைத்தும்)' என்று கூறுவார்கள்.