அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 'எனது உற்ற நண்பர் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) எனக்கு மூன்று விடயங்களை உபதேசித்தார்கள்: (அவை:) இரவின் ஆரம்பத்தில் வித்ருத் தொழுவது, ஃபஜ்ருடைய (கடமையான தொழுகைக்கு முன்னுள்ள சுன்னத்தான) இரண்டு ரக்அத்கள் தொழுவது, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது.'