இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5235ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ،
عَبَّاسٍ قَالَ سَقَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ زَمْزَمَ فَشَرِبَ وَهُوَ قَائِمٌ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் (நீரைக்) குடிக்கக் கொடுத்தேன், அவர்கள் நின்றுகொண்டே அருந்தினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5238ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، سَمِعَ الشَّعْبِيَّ،
سَمِعَ ابْنَ عَبَّاسٍ، قَالَ سَقَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ زَمْزَمَ فَشَرِبَ قَائِمًا
وَاسْتَسْقَى وَهُوَ عِنْدَ الْبَيْتِ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீரை ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் நின்றுகொண்டே (அதை) அருந்தினார்கள். மேலும், அவர்கள் (கஅபா எனும்) இறையில்லத்திற்கு அருகில் இருந்தபோது (மீண்டும்) தண்ணீர் கேட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح