இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5254ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ سَأَلْتُ الزُّهْرِيَّ أَىُّ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اسْتَعَاذَتْ مِنْهُ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ ابْنَةَ الْجَوْنِ لَمَّا أُدْخِلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَدَنَا مِنْهَا قَالَتْ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ‏.‏ فَقَالَ لَهَا ‏ ‏ لَقَدْ عُذْتِ بِعَظِيمٍ، الْحَقِي بِأَهْلِكِ ‏ ‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ رَوَاهُ حَجَّاجُ بْنُ أَبِي مَنِيعٍ عَنْ جَدِّهِ عَنِ الزُّهْرِيِّ أَنَّ عُرْوَةَ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ قَالَتْ‏.‏
அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் யார் அவர்களிடமிருந்து (அல்லாஹ்விடம்) அடைக்கலம் தேடியது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக உர்வா (ரஹ்) எனக்குப் பின்வருமாறு அறிவித்தார்" என்று கூறினார்கள்:

ஜவ்ன் குலத்துப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மணப்பெண்ணாகக்) கொண்டுவரப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் அவளுக்கு அருகில் சென்றார்கள். அப்போது அவள், "உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுகிறேன்" என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ மகத்தானவனிடம் அடைக்கலம் தேடிவிட்டாய். உன் குடும்பத்தாரிடமே சென்றுவிடு!" என்று கூறினார்கள்.

அபூஅப்துல்லாஹ் (இமாம் புகாரி) கூறுகிறார்: ஹஜ்ஜாஜ் பின் அபீமனீஃ (ரஹ்) அவர்கள் தம் பாட்டனார் வழியாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்தும், ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தும், உர்வா (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح