சஅத் பின் உபாதா (ரழி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாயார் இறந்துவிட்டார்கள். அவர் மீது ஒரு நேர்ச்சை (கடமையாக) இருந்தது. எனவே, அவர் சார்பாக நான் (ஓர் அடிமையை) விடுதலை செய்வது அவருக்குப் போதுமானதாக (அவரது நேர்ச்சையை நிறைவேற்றியதாக) அமையுமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமது தாயாருக்காக நீர் (அடிமையை) விடுதலை செய்வீராக!" என்று கூறினார்கள்.