இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4717ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ حُصَيْنٍ، قَالَ سَمِعْتُ جَدَّتِي، تُحَدِّثُ أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ فِي حَجَّةِ الْوَدَاعِ وَهُوَ يَقُولُ ‏ ‏ وَلَوِ اسْتُعْمِلَ عَلَيْكُمْ عَبْدٌ يَقُودُكُمْ بِكِتَابِ اللَّهِ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا ‏ ‏ ‏.‏
உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது உரையாற்றுவதை நான் கேட்டேன். அப்போது அவர்கள், "உங்களுக்கு ஒரு அடிமை (ஆட்சியாளராக) நியமிக்கப்பட்டு, அவர் உங்களை அல்லாஹ்வின் வேதத்தின்படி வழிநடத்தினால், நீங்கள் அவருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح