அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வியாபாரம் செய்யும் ஒவ்வொரு இருவருக்கும் இடையே, அவர்கள் (அந்த இடத்தை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை (உறுதியான) வியாபாரம் இல்லை; விருப்பத் தேர்வு (கியார்) உள்ள வியாபாரத்தைத் தவிர" என்று கூறுவதை நான் கேட்டேன்.