இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் (மக்களுக்கு) உரை நிகழ்த்துகையில் கூறியதாவது:
"ஸைத் பின் ஸாபித் (ரழி) அவர்களின் ஓதல் முறைப்படி நான் ஓதவேண்டுமென நீங்கள் எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருவாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட ஸூராக்களை நான் (நேரடியாகக்) கற்றுள்ளேன். (அப்போது) ஸைத் (ரழி) அவர்கள் இரண்டு பின்னல்கள் கொண்ட ஒரு சிறுவராக மற்ற சிறுவர்களுடன் இருந்தார்."
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை (குர்ஆனிலிருந்து) ஓதிக் காண்பித்தேன். அப்போது ஸைத் (பின் ஸாபித்) இரண்டு முடிக் கற்றைகள் (கொண்ட குடுமி) வைத்தவராகச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் லி கைரிஹி (பிற சான்றுகளின் துணையுடன் ஆதாரப்பூர்வமானது)