வாயில் பின் ஹுஜ்ர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். எனக்கு (நீண்ட) தலைமுடி இருந்தது. அப்போது அவர்கள், "(இது) தீமையானது!" என்று கூறினார்கள். அவர்கள் என்னைக் குறித்தே (அவ்வாறு) கூறினார்கள் என்று நான் எண்ணி, என் தலைமுடியை (வெட்டிக்) குறைத்துவிட்டுப் பிறகு அவர்களிடம் வந்தேன். அவர்கள் என்னிடம், "நான் உன்னைக் குறிப்பிடவில்லை; (எனினும்) இதுவே சிறந்தது" என்று கூறினார்கள்.