حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ ذَكَرَ الإِزَارَ فَالْمَرْأَةُ يَا رَسُولَ اللَّهِ . قَالَ " تُرْخِي شِبْرًا " . قَالَتْ أُمُّ سَلَمَةَ إِذًا يَنْكَشِفُ عَنْهَا . قَالَ " فَذِرَاعًا لاَ تَزِيدُ عَلَيْهِ " .
சஃபிய்யா பின்த் அபூஉபைத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கீழாடையைப் பற்றிக் குறிப்பிட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் (தங்கள் கீழாடையை எவ்வாறு அணிய வேண்டும்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "(கணுக்காலிலிருந்து) ஒரு சாண் அளவு கீழிறக்கித் தொங்கவிடலாம்" என்று பதிலளித்தார்கள். உம்மு ஸலமா (ரழி) அவர்கள், "அப்படியானால் அவர்களின் (பாதங்கள்) வெளிப்படுமே!" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், "அப்படியானால் ஒரு முழம் அளவு (கீழிறக்கித் தொங்க விடலாம்). அதற்கு மேல் வேண்டாம்" என்று கூறினார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் பெருமையுடன் தனது ஆடையை (தரையில்) இழுத்துச் செல்கிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளில் (கருணையுடன்) பார்க்க மாட்டான்." அப்போது உம்மு ஸலமா (ரழி) அவர்கள், "அப்படியானால் பெண்கள் தங்கள் ஆடை ஓரங்களை (தரையில்) என்ன செய்வது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (ஸல்), "(தங்கள் ஆடை ஓரங்களை) ஒரு சாண் அளவு தாழ்த்திக் கொள்ளட்டும்" என்றார்கள். அதற்கு அவர்கள் (ரழி), "அப்படியானால் அவர்களின் பாதங்கள் வெளிப்பட்டுவிடுமே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (ஸல்), "ஒரு முழம் அளவு தாழ்த்திக் கொள்ளட்டும்; அதற்கு மேல் அதிகரிக்கக் கூடாது" என்று கூறினார்கள். மேலும் (இமாம் திர்மிதி) கூறினார்: இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியாரான உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
(ஆண்களின்) கீழாடை (இஸார்) பற்றிக் குறிப்பிடப்பட்டபோது, "அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் (தங்கள் கீழாடைகளை என்ன செய்வது)?" என்று (நான்) கேட்டேன். அதற்கு அவர்கள், "அவள் அதை ஒரு சாண் அளவு (தரையில் படுமாறு) இறக்கிக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள். அதற்கு உம்மு ஸலமா (ரழி) அவர்கள், "அப்படியாயின் (அவளுடைய கால்கள்) வெளிப்பட்டுவிடுமே?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அப்படியானால் ஒரு முழம் அளவு (இறக்கிக்கொள்ளட்டும்); அதைவிட அவள் அதிகரிக்க வேண்டாம்" என்று கூறினார்கள்.
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கீழாடையைப் பற்றிக் குறிப்பிட்டபோது, “அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால் பெண்கள் (என்ன செய்வது)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவள் ஒரு சாண் அளவு (கீழே) இறக்கிக் கொள்ளட்டும்” என்றார்கள். “அப்படியாயின் அவள் (மேனி) வெளிப்பட்டுவிடுமே!” என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள், “அப்படியென்றால் ஒரு முழம் (இறக்கிக்கொள்ளட்டும்); அதைவிட அதிகப்படுத்தக் கூடாது” என்று கூறினார்கள்.
இதை மாலிக், அபூதாவூத், நஸாயீ மற்றும் இப்னு மாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
திர்மிதீ மற்றும் நஸாயீயில் இப்னு உமர் (ரழி) வழியாக வரும் அறிவிப்பில், “அப்படியாயின் அவர்களின் பாதங்கள் வெளிப்பட்டுவிடுமே!” என்று (உம்மு ஸலமா) கூறினார். அதற்கு நபியவர்கள், “அப்படியென்றால் அவர்கள் ஒரு முழம் இறக்கிக்கொள்ளட்டும்; அதைவிட அதிகப்படுத்தக் கூடாது” என்று கூறினார்கள்.
وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من جر ثوبه خيلاء لم ينظر الله إليه يوم القيامة" فقالت أم سلمة: فكيف تصنع النساء بذيولهن، قال: "يرخين شبراً" قالت: ِإذاً تنكشف أقدامهن. قال: "فيرخينه ذراعاً لا يزدن".((رواه أبو داود والترمذي))
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் தற்பெருமையின் காரணமாகத் தனது ஆடையை (தரையோடு) இழுத்துச் செல்கிறாரோ, அவரை மறுமை நாளில் அல்லாஹ் (கருணையுடன்) பார்க்க மாட்டான்."
அப்போது உம்மு ஸலமா (ரழி) அவர்கள், "அப்படியென்றால் பெண்கள் தங்கள் ஆடைகளின் ஓரங்களை என்ன செய்வது?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள், "அவர்கள் ஒரு சாண் அளவு (கீழே) இறக்கிக் கொள்ளட்டும்" என்றார்கள்.
அதற்கு அவர்கள், "அப்படியென்றால் அவர்களின் பாதங்கள் வெளிப்படுமே!" என்றார்கள்.
அதற்கு நபியவர்கள், "அவர்கள் ஒரு முழம் அளவு (கீழே) இறக்கிக் கொள்ளட்டும்; (இதைவிட) அதிகரிக்கக் கூடாது" என்று கூறினார்கள்.
(அபூ தாவூத் மற்றும் திர்மிதி அறிவிக்கிறார்கள்.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் பெருமையினால் தமது ஆடையை (தரையில் படும்படி) இழுத்துச் செல்கிறாரோ, அவரை மறுமை நாளில் அல்லாஹ் (கருணையுடன்) பார்க்க மாட்டான்."
அப்போது உம்மு ஸலமா (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் (தங்களது ஆடையின் கீழ்ப்பகுதியை) என்ன செய்வது?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(கணுக்காலுக்குக் கீழே) ஒரு சாண் அளவு இறக்கிக் கொள்ளட்டும்" என்றார்கள்.
உடனே உம்மு ஸலமா (ரழி) அவர்கள், "அப்படியென்றால் அவர்களின் கெண்டைக்கால்கள் (அல்லது பாதங்கள்) வெளியே தெரியுமே!" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் ஒரு முழம் அளவு இறக்கிக் கொள்ளட்டும். அதற்கு மேல் அவர்கள் அதிகரிக்க வேண்டாம்" என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்ம ஸலமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(ஆண்களின்) கீழாடை (கணுக்காலுக்குக் கீழே இருக்கக்கூடாது என்பது) பற்றிக் குறிப்பிடப்பட்டபோது, "அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் (தங்கள் கீழாடையை எவ்வளவு தூரம் தொங்கவிடலாம்)?" என்று (உம்ம ஸலமா (ரழி) அவர்கள்) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் (கணுக்காலிலிருந்து) ஒரு ஜாண் அளவு கீழே தொங்கவிடலாம்" என்று பதிலளித்தார்கள். உம்ம ஸலமா (ரழி) அவர்கள், "அப்படியானால் (நடக்கும்போது) அவர்களின் (பாதங்கள்) வெளியாகும் நிலையில் இருக்குமே!" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் (கணுக்காலிலிருந்து) ஒரு முழம் அளவு (தொங்கவிடலாம்); அதைவிட அதிகமாகக் கூடாது" என்று கூறினார்கள்.