நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்:
“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி வல்ஹஸனி, வல்அஜ்ஸி வல்கஸலி, வல்ஜுப்னி வல்புக்லி, வளலஇத் தைனி வகலபத்திர் ரிஜால்.”
“யா அல்லாஹ்! கவலையிலிருந்தும் (எதிர்காலத்தைப் பற்றிய), துக்கத்திலிருந்தும் (கடந்த காலத்தைப் பற்றிய), இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் சுமை மிகைப்பதிலிருந்தும் (அதைச் செலுத்த முடியாமல் திணறுவதிலிருந்தும்), மனிதர்கள் என்னை மிகைப்பதிலிருந்தும் (அடக்கி ஆள்வதிலிருந்தும் அல்லது எதிரிகளால் தோற்கடிக்கப்படுவதிலிருந்தும்) உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.”
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில பிரார்த்தனைகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. அவர்கள் வழக்கமாகக் கூறுவார்கள்: 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல்-ஹம்மி, வல்-ஹஸனி, வல்-அஜ்ஸி, வல்-கஸலி, வல்-புக்லி, வல்-ஜுப்னி, வத்-தய்னி, வ ஃகலபத்திர்-ரிஜால் (யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை, துக்கம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் மற்றும் பிற மனிதர்களால் அடக்கப்படுவதிலிருந்தும் (அல்லது பிற மனிதர்களால் மிகைக்கப்படுவதிலிருந்தும்) உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)' அபூ அப்துர்-ரஹ்மான் (இமாம் நஸாயீ) கூறினார்கள்: இதுவே சரியானது, இப்னு ஃபுதைலின் ஹதீஸ் தவறானது.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது, "இறைவா! கவலை, துக்கம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடனின் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள்.
அபூஅப்துர்ரஹ்மான் (நஸாயீ) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும்) ஸயீத் பின் ஸலமா ஒரு பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இந்த ஹதீஸில் உள்ள கூடுதல் தகவலுக்காகவே இதனைப் பதிவு செய்துள்ளோம்.