حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ
مُحَارِبِ بْنِ دِثَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ
الْحَنْتَمِ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ . قَالَ سَمِعْتُهُ غَيْرَ مَرَّةٍ .
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹன்தம்’ (பச்சை நிற மண்குடம்), ‘துப்பாஃ’ (சுரைக்குடுவை) மற்றும் ‘முஸஃப்பத்’ (தார் பூசப்பட்ட பாத்திரம்) ஆகியவற்றில் (பேரீச்சம்பழம் அல்லது திராட்சையை ஊறவைத்து ‘நபீத்’ எனும் பானத்தைத் தயாரிப்பதைத்) தடை செய்தார்கள்.
(இதனை அறிவிக்கும் முஹாரிப் இப்னு திஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இதை ஒரு முறைக்கு மேல் செவியுற்றுள்ளேன்.