நீங்கள் எங்களை (பெண்களை) நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக ஆக்குகிறீர்களா? நான் என் படுக்கையில் படுத்திருக்கும்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து படுக்கையின் நடுப்பகுதியை நோக்கியவாறு தொழுவார்கள். அவர்கள் தொழும்போது அவர்களுக்கு முன்னால் நிற்பதை நான் நல்லதல்லவெனக் கருதுவேன். அதனால், என் குற்ற உணர்வு நீங்கும்வரை படுக்கையின் கால்மாட்டில் இருந்து நான் மெதுவாகவும் ஓசையின்றியும் நழுவிச் சென்றுவிடுவது வழக்கம்.