أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدِي امْرَأَةٌ مِنَ الْيَهُودِ وَهِيَ تَقُولُ إِنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ . فَارْتَاعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ " إِنَّمَا تُفْتَنُ يَهُودُ " . وَقَالَتْ عَائِشَةُ فَلَبِثْنَا لَيَالِيَ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهُ أُوحِيَ إِلَىَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ " . قَالَتْ عَائِشَةُ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدُ يَسْتَعِيذُ مِنْ عَذَابِ الْقَبْرِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது என்னுடன் ஒரு யூதப் பெண் இருந்தாள். அவள், 'நீங்கள் உங்கள் கப்றுகளில் (சவக்குழிகளில்) சோதிக்கப்படுவீர்கள்' என்று கூறிக் கொண்டிருந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமுற்று, 'மாறாக யூதர்கள்தான் சோதிக்கப்படுவார்கள்' என்று கூறினார்கள்."
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "சில இரவுகளுக்குப் பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'நிச்சயமாக நீங்கள் உங்கள் கப்றுகளில் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்கள்."
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்; "அதற்குப் பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றுடைய வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதை நான் செவியுற்றேன்."