நான் அபூ பர்ஸா (ரழி) அவர்கள் கூறுவதைக் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷா தொழுகையை நள்ளிரவு வரை கூட தாமதப்படுத்துவதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை; மேலும், அ(த்தொழுகையை நிறைவேற்றுவ)தற்கு முன் உறங்குவதையும், அ(த்தொழுகைக்குப்)பின் பேசுவதையும் அவர்கள் விரும்பவில்லை. ஷுஃபா அவர்கள் கூறினார்கள்: நான் அவரை (சையார் பின் ஸலாமாவை) இரண்டாவது முறையாக மீண்டும் சந்தித்தேன், அப்போது அவர் கூறினார்கள்: இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை கூட.