அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (அல்லாஹ்வின்) அடியான் தொழுகைக்காகக் காத்திருக்கும் நிலையில், தன் தொழுமிடத்தில் இருக்கும் வரை அவன் தொழுகையிலேயே இருப்பதாகக் கருதப்படுகிறான். அவன் அவ்விடத்தை விட்டு நீங்கும் வரை அல்லது அவனுக்குத் தீட்டு ஏற்படும் வரை வானவர்கள், "யா அல்லாஹ், இவரை மன்னிப்பாயாக! யா அல்லாஹ், இவருக்குக் கருணை காட்டுவாயாக!" என்று கூறுகிறார்கள். (நபியவர்களிடம்) "தீட்டு என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அவன் மெதுவாகவோ அல்லது சத்தமாகவோ காற்றுப் பிரிப்பது" என்று பதிலளித்தார்கள்.