حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى الْفَجْرَ تَرَبَّعَ فِي مَجْلِسِهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَسْنَاءَ .
ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகையைத் தொழுதபோது, சூரியன் நன்கு உதயமாகும் வரை அவர்கள் தொழுத இடத்திலேயே சம்மணமிட்டு அமர்ந்தார்கள்.
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى الْفَجْرَ قَعَدَ فِي مُصَلاَّهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ஜாபிர் பின் சமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையைத் தொழுதால், சூரியன் உதயமாகும் வரை அவர்கள் தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள்."