அபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் இரவில் ஓய்வெடுப்பதற்காகத் தங்கும்போது, தமது வலப்புறம் சாய்ந்து கொள்வார்கள். அதிகாலைக்குச் சற்று முன்பு ஓய்வெடுப்பதற்காகத் தங்கும்போது, தமது முழங்கையை நட்டுவைத்து, தமது உள்ளங்கையில் தலையை வைத்துக் கொள்வார்கள்.”