யஹ்யா பின் யஸீத் அல்ஹன்னாஈ அவர்கள் கூறினார்கள்: நான் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம் (பயணத்தின் போது) தொழுகையைச் சுருக்குவது (கஸ்ர்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அல்லது மூன்று ஃபர்ஸக் (என்ற தூரம் குறித்து அறிவிப்பாளர் ஷுஃபாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது) தொலைவுக்கான பயணமாகப் புறப்பட்டால், அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.