இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1686சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُوتِرُ عَلَى الرَّاحِلَةِ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தின் போது) தமது வாகனத்தின் மீது வித்ரு தொழுபவர்களாக இருந்தார்கள் (வாகனம் செல்லும் திசையை நோக்கியவாறு).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
1174சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى. وَيُوتِرُ بِرَكْعَةٍ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (நஃபில் தொழுகைகளை) ஈரிரண்டாகத் தொழுவார்கள். மேலும், ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)