حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ. قَالَ وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ حَفْصَ بْنَ عَاصِمٍ، قَالَ سَمِعْتُ رَجُلاً، مِنَ الأَزْدِ يُقَالُ لَهُ مَالِكٌ ابْنُ بُحَيْنَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً وَقَدْ أُقِيمَتِ الصَّلاَةُ يُصَلِّي رَكْعَتَيْنِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَثَ بِهِ النَّاسُ، وَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الصُّبْحَ أَرْبَعًا، الصُّبْحَ أَرْبَعًا . تَابَعَهُ غُنْدَرٌ وَمُعَاذٌ عَنْ شُعْبَةَ فِي مَالِكٍ. وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ سَعْدٍ عَنْ حَفْصٍ عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ. وَقَالَ حَمَّادٌ أَخْبَرَنَا سَعْدٌ عَنْ حَفْصٍ عَنْ مَالِكٍ.
மாலிக் இப்னு புஹைனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட நிலையில், ஒரு மனிதர் (ஃபஜ்ருடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுது கொண்டிருந்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஃபர்ளுத்) தொழுகையை முடித்துத் திரும்பியதும், மக்கள் அந்த மனிதரைச் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஃபஜ்ருடைய ஃபர்ளுத் தொழுகை) நான்கு ரக்அத்களா? (ஃபஜ்ருடைய ஃபர்ளுத் தொழுகை) நான்கு ரக்அத்களா?" என்று (ஆச்சரியத்துடனும், கண்டனத்துடனும்) கேட்டார்கள்.
இப்னு புஹைனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
'ஸுப்ஹு தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. முஅத்தின் இகாமத் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் (சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் கூறினார்கள்: 'ஸுப்ஹை நான்கு ரக்அத்துகளாகவா தொழுகிறாய்?' (இகாமத் சொல்லப்பட்ட பிறகு ஃபர்ளு தொழுகையைத் தவிர வேறு எந்தத் தொழுகையையும் தொழுவது கூடாது என்ற கண்டிப்புடன்.)