أَخْبَرَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஃபஜ்ரு(க்கு முந்திய சுன்னத்) இரண்டு ரக்அத்கள், இவ்வுலகம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தவை."
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்கள் (அதாவது, ஃபஜ்ருடைய ஃபர்ளுத் தொழுகைக்கு முன்னுள்ள சுன்னத்தான இரண்டு ரக்அத்கள்) இவ்வுலகத்தையும், இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் விடச் சிறந்தவை."
وعنها عن النبي صلى الله عليه وسلم قال: ركعتا الفجر خير من الدنيا وما فيها ((رواه مسلم)). وفي رواية لهما لأحب إلي من الدنيا جميعًا.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னுள்ள இரண்டு ரக்அத்கள் இவ்வுலகம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்ததாகும்." (இதை) முஸ்லிம் (இமாம்) அறிவித்தார்கள்.
மற்றொரு அறிவிப்பில் (புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இரு இமாம்களிடமும்) இடம்பெற்றுள்ளது: "(ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னுள்ள) இரண்டு ரக்அத்கள் முழு உலகையும் விட எனக்கு மிகவும் பிரியமானவையாகும்."