இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1136ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يصلي بالليل، وهي معترضة بين يديه، فإذا بقي الوتر، أيقظها فأوترت‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
وفي رواية له‏:‏ فإذا بقي الوتر قال‏:‏ ‏ ‏قومي فأوتري يا عائشة‏ ‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதுகொண்டிருக்கும்போது, ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அவர்களின் தொழுகை திசையில்) குறுக்காகப் படுத்திருப்பார்கள். வித்ர் தொழுகை (மட்டும்) எஞ்சியிருக்கும்போது, நபி (ஸல்) அவர்கள் அவர்களை எழுப்புவார்கள்; உடனே அவர்கள் வித்ர் தொழுவார்கள்.

அதன் மற்றொரு அறிவிப்பில்: வித்ர் தொழுகை எஞ்சியிருக்கும்போது, "ஆயிஷாவே! எழுந்து வித்ர் தொழுவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.