ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அவர்களின் படுக்கையில் அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தொழுவார்கள். அவர்கள் வித்ரு தொழ விரும்பும்போது, என்னை எழுப்புவார்கள்; நானும் வித்ரு தொழுவேன்.