ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தூக்கம் அல்லது வலியின் காரணமாக இரவில் (தஹஜ்ஜுத்) தொழாமல் விட்டுவிட்டால், பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் (அதாவது, இரவின் தொழுகைக்குப் பகரமாக).
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் இரவில் (வழக்கமாகத் தொழும் தொழுகையை) தொழாமல் இருந்தால் -அதைத் தூக்கம் தடுத்திருந்தாலோ அல்லது அவர்களுடைய கண்கள் அவர்களை மிகைத்திருந்தாலோ- அவர்கள் பகல் நேரத்தில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்."