இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

748 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا الْقَاسِمُ الشَّيْبَانِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَهْلِ قُبَاءٍ وَهُمْ يُصَلُّونَ فَقَالَ ‏ ‏ صَلاَةُ الأَوَّابِينَ إِذَا رَمِضَتِ الْفِصَالُ ‏ ‏ ‏.‏
ஸைத் இப்னு அர்கம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குபா மக்களிடம் (அவர்கள் லுஹா தொழுகையை) தொழுதுகொண்டிருந்த நிலையில் சென்றார்கள். அப்போது அவர்கள், "அவ்வாபீன் (இறைவனிடம் அதிகம் மீளுபவர்களின்) தொழுகை என்பது, பால்குடி மறந்த இளம் ஒட்டகக் குட்டிகளின் கால்கள் (சூரிய வெப்பத்தால்) சுடும் நேரமாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1143ரியாதுஸ் ஸாலிஹீன்
عن زيد بن أرقم رضي الله عنه أنه رأى قومًا يصلون من الضحى، فقال‏:‏ أما لقد علموا أن الصلاة في غير هذه الساعة أفضل، إن رسول الله صلى الله عليه وسلم قال‏:‏ ‏ ‏صلاة الأوابين حين ترمض الفصال‏ ‏‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
ஸைத் பின் அர்கம் (ரழி) அவர்கள், சிலர் (முற்பகலில்) தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அப்போது அவர்கள், "இந்த நேரத்தை விட வேறு நேரத்தில் தொழுவதே சிறந்தது என்பதை இவர்கள் அறியவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அவ்வோபீன் (அல்லாஹ்விடம் அடிக்கடி மீள்பவர்களின்) தொழுகை நேரம், ஒட்டகக் குட்டிகளை வெயில் சுடும் நேரமாகும்' என்று கூறியுள்ளார்கள்" என்றார்கள்.