அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
"வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. அந்நேரத்தை எந்த முஸ்லிமும் (தன்னுடைய பிரார்த்தனையுடன்) சரியாக அடைந்து, அல்லாஹ்விடம் அதில் நன்மையான எதையேனும் கேட்க, அதை அல்லாஹ் அவனுக்கு வழங்காமல் இருப்பதில்லை." மேலும் (அவர்கள்) கூறினார்கள்: "அது மிகக் குறுகிய நேரமாகும்."
وعن جابر رضي اللله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم ، يقول: إن في الليل لساعة، لا يوافقها رجل مسلم يسأل الله تعالى خيرًا من أمر الدنيا والآخرة، إلا أعطاه إياه، وذلك كل ليلة ((رواه مسلم)).
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்: “நிச்சயமாக இரவில் ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் சரியாக அடைந்து (அதாவது, அந்த நேரத்தில் அல்லாஹ்விடம்) இம்மை மற்றும் மறுமை தொடர்பான நன்மையை வேண்டினால், அதை அவருக்கு அவன் வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் உண்டு.”