இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

698ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ نِمْتُ عِنْدَ مَيْمُونَةَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ، فَتَوَضَّأَ ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ عَلَى يَسَارِهِ، فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ ـ وَكَانَ إِذَا نَامَ نَفَخَ ـ ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ، فَخَرَجَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ‏.‏ قَالَ عَمْرٌو فَحَدَّثْتُ بِهِ بُكَيْرًا فَقَالَ حَدَّثَنِي كُرَيْبٌ بِذَلِكَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிற்றன்னை) மைமூனா (ரலி) அவர்களிடம் (ஓர் இரவு) உறங்கினேன்; அன்றிரவு நபி (ஸல்) அவர்கள் அங்கே இருந்தார்கள். அவர்கள் உளூச் செய்துவிட்டுத் (இரவுத் தொழுகைக்காக) தொழ நின்றார்கள். நான் அவர்களுக்கு இடது பக்கம் நின்றேன். உடனே அவர்கள் என்னைப் பிடித்துத் தமக்கு வலப் பக்கம் நிறுத்திக்கொண்டார்கள். பிறகு பதின்மூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். (எந்தளவிற்கென்றால்) அவர்கள் மூச்சுவிடும் சப்தம் கேட்டது. அவர்கள் உறங்கினால் (இவ்வாறு) மூச்சுவிடும் சப்தம் கேட்பது வழக்கம். பிறகு முஅத்தின் அவர்களிடம் வந்தார். உடனே அவர்கள் (பஜ்ர் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு) வெளியே சென்று தொழுதார்கள்; (மீண்டும்) உளூச் செய்யவில்லை.

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் இதை புகைர் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது, "குறைப் (ரஹ்) அவர்கள் இதை எனக்கு அறிவித்தார்கள்" என்று அவர் கூறினார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح