ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் இரவில் (குர்ஆனின்) ஒரு சூராவை ஓதுவதைக் கேட்டார்கள். அப்போது கூறினார்கள்: 'அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக! அவர் எனக்கு இன்னின்ன வசனங்களை (ஒரு குறிப்பிட்ட) சூராவிலிருந்து நினைவூட்டினார், அவற்றை நான் மறந்திருந்தேன்.'