அப்துர்-ரஹ்மான் பின் அபீ ஸயீத் (ரழி) அவர்கள், தம் தந்தை (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பருவ வயதை அடைந்த ஒவ்வொருவர் மீதும் வெள்ளிக்கிழமையன்று குளிப்பதும், பல் துலக்குவதும் (மிஸ்வாக் செய்வதும்), தம்மால் இயன்றளவு நறுமணத்தைப் பூசிக்கொள்வதும் கடமையாகும்.”