وعن ابن عمر رضي الله عنهما قال: كنا جلوساً مع رسول الله صلى الله عليه وسلم ، إذ جاء رجل من الأنصار، فسلم عليه، ثم أدبر الأنصاري، فقال رسول الله. صلى الله عليه وسلم : " يا أخا الأنصار؛ كيف أخي سعد بن عبادة؟" فقال: صالح، فقال رسول الله صلى الله عليه وسلم : "من يعوده منكم؟" فقام وقمنا معه، ونحن بضعة عشر، ما علينا نعال، ولا خفاف، ولا قلانس، ولا قمص، نمشي في تلك السباخ، حتى جئناه، فاستأخر قومه من حوله حتى دنا رسول الله صلى الله عليه وسلم وأصحابه الذين معه. ((رواه مسلم)).
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தோம், அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து சலாம் கூறினார். அவர் திரும்பிச் செல்லும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், "ஓ அன்சாரி சகோதரரே, என் சகோதரர் சஃத் பின் உபாதா எப்படி இருக்கிறார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அவர் நலமாக இருக்கிறார்" என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யார் அவரை நலம் விசாரிக்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்கள். இதைக்கூறிவிட்டு அவர்கள் எழுந்தார்கள், நாங்களும் அவர்களைப் பின்தொடர்ந்தோம். நாங்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்தோம், மேலும் எங்களிடம் காலணிகளோ, காலுறைகளோ, தொப்பிகளோ, சட்டைகளோ இருக்கவில்லை. சஃத் (ரழி) அவர்களின் இல்லத்திற்கு வரும் வரை நாங்கள் அந்த தரிசு நிலத்தின் வழியாக கால்நடையாக நடந்தோம். அவருடைய குடும்பத்தார் வழிவிட்டனர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் வந்தவர்களும் அவரிடம் சென்றார்கள்.