இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1264ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ يَمَانِيَةٍ بِيضٍ سَحُولِيَّةٍ مِنْ كُرْسُفٍ، لَيْسَ فِيهِنَّ قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வெள்ளையான, பருத்தியாலான, யமன் நாட்டு 'சஹூலிய்யா' (எனப்படும் ஒருவகை) மூன்று துணித் துண்டுகளில் கஃபனிடப்பட்டார்கள். அந்த (கஃபன்) துணிகளில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح