இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

581ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن عائشة رضي الله عنها قالت‏:‏ كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع، فيقول‏:‏ السلام عليكم دار قوم مؤمنين، وأتاكم ما توعدون، غداً مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون، اللهم اغفر لأهل بقيع الغرقد” ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னிடம் தங்கும் முறை வரும்போதெல்லாம், இரவின் கடைசிப் பகுதியில் ‘பகீஃ’ பகுதிக்குச் சென்று (பின்வருமாறு) கூறுவார்கள்:

“அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன், வஅதாகும் மா தூஅதூன், கதன் முஅஜ்ஜலூன், வஇன்னா இன்ஷாஅல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மக்ஃபிர் லிஅஹ்லி பகீஇல் கர்கத்.”

(இதன் பொருள்: “விசுவாசிகளின் இல்லத்தாரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவை உங்களிடம் வந்துவிட்டன. நாளை வரை உங்களுக்குத் தவணை அளிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நாங்களும், அல்லாஹ் நாடினால், உங்களைப் பின்தொடர்ந்து வருவோம். யா அல்லாஹ்! பகீஃ அல்-கர்கதில் உள்ளவர்களை மன்னிப்பாயாக!”)